பிரபல நடிகரான அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தள்ளிக் கொண்டு போனது. பின்னர் அர்பைஜானில் வைத்து விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை நடத்தினர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது.
70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்டப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கின் போது டூப் போடாமல் நடிகர் அஜித்தும் ஆரவும் இணைந்து காரில் பயணித்த போது விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்து காட்சிகளை பட குழுவினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அஜித்துக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 20-ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அர்பைஜானில் தொடங்கப்பட்டது. இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்காக படக்குழுவினர் அர்பைஜானுக்கு சென்றனர். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜித் கலந்து கொண்ட வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியானது. அதில் ரோப் மூலம் கட்டப்பட்ட கார் அந்தரத்தில் தொங்கி சுற்றுகிறது. அந்த காட்சி எடுத்து முடித்தவுடன் அஜித் சிரித்த முகத்துடன் பேசுகிறார். வீடியோவை பார்ப்பவர்கள் ரோப் அறுந்து விழுந்தால் என்ன ஆகும் என அச்சப்பட வைக்கும் உணர்வோடு இருக்கின்றனர். படத்தின் காட்சிகளுக்காக அஜித் கஷ்டப்பட்டு நடிக்கிறாரே எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#VidaaMuyarchi shooting resumed today with an highly risky car stunt 🎬✅#Ajithkumar🔥🔥pic.twitter.com/nSDw1tyIiz
— AmuthaBharathi (@CinemaWithAB) June 24, 2024