“ஆப்ரேஷன் சிந்தூரில் வெற்றி…” பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்தியா….. மாஸ் காட்டிய விமானப்படை தளபதி….!

By Srimathi on ஆவணி 31, 2025

Spread the love

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மே மாதம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து புதிய காட்சிகள் மற்றும் விவரங்களை குறித்து விமான படை துணை தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஸ்வர் திவாரி நேற்று பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல், 4 நாட்களிலேயே பாகிஸ்தான் மண்டியிட்டது. மேலும் இந்த தாக்குதலில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசிய பொழுது, ஆபரேஷன் சிந்தூரில் 50க்கும் குறைவான ஆயுதங்களையே தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் மண்டியிட்டது. இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை. நாங்கள் ஒவ்வொரு ஆயுதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோம். ஏனென்றால் அது எங்கள் திட்டமிடுபவர்கள் திறனை வலிமையாக ஒப்புக் கொள்வதாகும். 1971 ஆண்டு போரில், தாக்குதலுக்கு ஆளாகாத பாகிஸ்தானின் சில இலக்குகள் கூட ஆபரேஷன் சிந்தூரில் தாக்கப்பட்டன. அந்த அளவிற்கு சேதத்தை நாம் அளித்துள்ளோம். போரை தொடங்குவது எளிது முடிப்பது கடினம். அதை மனதில் கொண்டு செயல்பட்டோம். தாக்குதலின் பொழுது துல்லியமான இலக்கு வைப்பது மிகவும் அவசியம். இல்லையேனில், அது மிகவும் ஆபத்தான சூழலில் முடிந்து விடும். எந்தவித சேதமும் இல்லாமல், பார்த்துக் கொண்டோம். எங்கள் திட்டமிடல் மற்றும் செயல்பாடு, மக்களுக்கு தான் அனைத்து பெருமையும் சேரும். தாக்குதலுக்கு பின்னால் இருந்த நோக்கம் பாகிஸ்தானுக்கு முறையான செய்தியை வழங்குவது தான், அதை சரியாக செய்து விட்டோம் என்று கூறினார்.