வெற்றிமாறனுக்கு முதல் தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்தது இந்த வெளிநாட்டுப் படம்தானா? அவரே பகிர்ந்த தகவல்!

By vinoth on ஐப்பசி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

   

#image_title

   

வெற்றிமாறனுக்கு முதல் முதலாக தேசிய விருது பெற்றுத்தந்த திரைப்படம் ஆடுகளம் திரைப்படம். அந்த படத்துக்கு மொத்தம் ஆறு விருதுகள் கிடைத்தது. சிறந்த திரைக்கதை மற்றும் இயக்குனர் ஆகிய இருபிரிவுகளில் அவருக்கு விருது கிடைத்தது. இன்றளவும் திரைக்கதை மற்றும் கதாபாத்திர உருவாக்கத்துக்கு ஒரு பாடமாக் இந்த படம் உள்ளது.

 

இந்நிலையில் ஆடுகளம் பற்றி ஒரு நேர்காணலில் பேசும்போது “நான் அமெர்ரோஸ் படம் பார்த்து வியந்து போனேன். அந்த படத்தில் வரும் நாய் சண்டைக் காட்சிகள் எனக்கு ரொம்ப பிடித்திருனதது. அது போல நம்ம ஊரில் சேவல் சண்டை உள்ளதே, அதை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்றுதான் ஆடுகளம் படத்தின் கதையை முதலில் உருவாக்கினேன். அதன் பின்னர்தான் கதை வளர்ந்து ஆடுகளம் படமாக உருவானது.” எனக் கூறியுள்ளார்.

#image_title

இயக்குனர் அலஜாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரித்து இயக்க்கிய அமெரோஸ் பெரோஸ் திரைப்படம் உலகளவில் கவனம் ஈர்த்த திரைப்படம். மூன்று விதமான காதல் கதைகளும், அந்த கதைகளில் குறுக்கிடும் நாய்கள் பற்றிய கதையாக நான் லீனியர் பாணியில் அந்த கதையை உருவாக்கி இருப்பார் இன்னாரித்து. இந்த படத்தின் திரைக்கதை வடிவத்தை இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய ஆயுத எழுத்து திரைப்படத்தில் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.