“இருளில் மூழ்கிய தமிழகம்”…. “வெற்றி மின்வெட்டு”…. போட்டோவை பகிர்ந்து முதல்வர் விஜய்யை அலறவிட்ட கனிமொழி எம்பி….!

Spread the love

தமிழகம் முழுவதும் பரவலாக நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஏற்படும் இந்த மின்தடையால் முதியவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தேர்வு நேரங்களில் போதிய மின்சாரம் இன்றி மாணவர்கள் விளக்கு வெளிச்சத்திலும், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் படிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தச் சூழலில், திமுக எம்பியும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வரைபடத்தில் தமிழகப் பகுதி மட்டும் இருளில் மூழ்கியிருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, “வெற்றி மின்வெட்டு” என அவர் பதிவிட்டுள்ளார். தவெக அரசு தனது திட்டங்கள் அனைத்திற்கும் ‘வெற்றி’ என்ற சொல்லைப் பயன்படுத்தி வரும் நிலையில், அதைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் அமைந்த இந்தப் பதிவு நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று டிரெண்டாகி வருகிறது.

அரசு தரப்பில் மின்சாரத்துறை அமைச்சர், “காற்றாலை மின் உற்பத்தி குறைவு, பக்கத்து மாநிலங்களிலும் மின்வெட்டு உள்ளது, பியூஸ் கேரியர் எடுக்கப்படுகிறது” என அடுக்கடுக்கான காரணங்களைக் கூறி வருவது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த முதல்வர் விஜய் சென்னையில் உள்ள ‘மின்னகத்திற்கு’ நேரில் சென்று ஆய்வு நடத்தியபோதிலும், அது வெறும் ‘ரீல்ஸ்’ விளம்பரத்திற்காக மட்டுமே செய்யப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. முதலமைச்சரின் பெரம்பூர் தொகுதியிலேயே மக்கள் குடும்பத்துடன் வீதிக்கு வந்து போராடும் நிலை உருவாகியுள்ளது.

தவெக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாமல், முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கே பெயர்களை மட்டும் மாற்றி அமைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மின்வெட்டு போன்ற அத்தியாவசியப் பிரச்சினையைச் சீரமைக்க அரசு எந்தவித முன்நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், கனிமொழி எம்பியின் இந்த “வெற்றி மின்வெட்டு” பதிவு அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

8 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago