கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அத்தாணி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டில் பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்ற கும்பல் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்தது. இது மலையாள சினிமா துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின்படி மலையாள நடிகர் திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் இருந்த முன்விரோதம் காரணமாகவே சதிதிட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரிய வந்தது.
இதில் நடிகர் திலீப் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திட்டமிட்டு என்னை சிக்க வைத்துள்ளனர் என்று நடிகர் திலீப் ஏற்கனவே கூறியிருக்கிறார். இந்நிலையில் நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுக்கிய சம்பவத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இது கேரளா சினிமாத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…