கொஞ்ச நேரம் மரியாதையா பேசுணோம்… அப்புறம் ‘வாடா போடான்னு’ ஆரம்பிச்சிட்டோம்- சக நடிகர் குறித்து வெண்ணிற ஆடை மூர்த்தி!

By vinoth on ஏப்ரல் 1, 2025

Spread the love

தமிழ் திரையுலகில் 1965 இல் டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் வெண்ணிற தாய் மூர்த்தி. அத்திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலம் அவருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற பெயரும் வழங்கப் பட்டது.

நகைச்சுவை நடிகர் மூர்த்தி உலக மக்கள் அனைவரையும் தனது சிரிப்பால் கட்டிப்போட்டவர். நகைச்சுவை நடிகர் வெண்ணிற மூர்த்தி பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் வெளிவரும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.நகைச்சுவை நடிகர் மூர்த்தி இந்திய சினிமா திரை உலகில் 500 – க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இன்றுவரை நடித்துள்ளர்.

   

வெண்ணிற ஆடை மூர்த்தியின் தனிச்சிறப்பு என்னவென்றால் எப்படியாவது தன்னுடைய காமெடிக் காட்சிகளில் எதாவது இரட்டை அர்த்தம் வருவது போல வசனங்களோ அல்லது உடல் மொழியையோ வெளிப்படுத்தி விடுவார். ஆனாலும் அவற்றில் பல பெரியவர்கள் ரசித்து பார்க்கும்படி இருக்கும். ஈகோ பார்க்காமல் எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ள வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் முழு மகிழ்ச்சியோடு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் எந்த சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. பத்திரிக்கையாளர், நடிகர் சித்ரா லட்சுமணனுக்கு மட்டும் ஒரே ஒரு பேட்டிக் கொடுத்தார்.

   

அந்த பேட்டியில் தன்னுடைய சக நடிகரும் நண்பருமான மறைந்த தேங்காய் சீனிவாசன் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “தேங்காய் சீனிவாசனை எனக்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் தெரியாது. முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் பார்த்தோம். கொஞ்ச நேரம் ‘வாங்க சார் போங்க சார்’ என மரியாதையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

 

முதலில் அவன்தான் ஆரம்பித்தான். இங்க பாருடா ‘எனக்கு இந்த வாங்க சார்.. போங்க சார் என்னால் பிடிக்கல’. நாம வாடா போடான்னே பேசிப்போம்னு சொன்னான். எனக்கும் அதுதான் தோனுச்சு. அதில இருந்து ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஆகிட்டோம். என் மேல பாசமா இருப்பான். எனக்கு ஒரு தடவ உடம்பு முடியாமப் போனப்ப, நடந்தே திருப்பதிக்குப் போயிட்டு வந்தான்.” எனக் கூறியுள்ளார்.