தமிழ் திரையுலகில் 1965 இல் டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் வெண்ணிற தாய் மூர்த்தி. அத்திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலம் அவருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற பெயரும் வழங்கப் பட்டது.
நகைச்சுவை நடிகர் மூர்த்தி உலக மக்கள் அனைவரையும் தனது சிரிப்பால் கட்டிப்போட்டவர். நகைச்சுவை நடிகர் வெண்ணிற மூர்த்தி பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் வெளிவரும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.நகைச்சுவை நடிகர் மூர்த்தி இந்திய சினிமா திரை உலகில் 500 – க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இன்றுவரை நடித்துள்ளர்.
வெண்ணிற ஆடை மூர்த்தியின் தனிச்சிறப்பு என்னவென்றால் எப்படியாவது தன்னுடைய காமெடிக் காட்சிகளில் எதாவது இரட்டை அர்த்தம் வருவது போல வசனங்களோ அல்லது உடல் மொழியையோ வெளிப்படுத்தி விடுவார். ஆனாலும் அவற்றில் பல பெரியவர்கள் ரசித்து பார்க்கும்படி இருக்கும்.
ஈகோ பார்க்காமல் எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ள வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் முழு மகிழ்ச்சியோடு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் எந்த சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் மட்டும் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார்.

அதில் அவர் பேசும்போது தனக்கு ஜோதிடம் நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர்கள் பலருக்கு நான் சரியாக ஜோதிடம் கணித்து சொல்லியுள்ளேன் எனக் கூறியுள்ளார். அதில் “நான் சிறு வயதிலேயே ஜோதிடம் படித்தேன். அதை அப்புறம் தெரிந்தவர்களுக்கு மட்டும் பார்த்து சொன்னேன். ஜெயலலிதா மேடம் அரசியலுக்கு வருவாங்கன்னு அவங்ககிட்ட சொன்னேன். அதே போல சிவாஜி சாரிடம் வெளிநாட்டு அரசாங்கம் உங்களுக்கு பெரிய கௌரவம் செய்யும் என சொன்னேன். இரண்டுமே நடந்தது” எனக் கூறியுள்ளார்.
