சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனக்கு என தனி இடத்தை உருவாக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“மெரினா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தார். அதற்கு பிறகு சீமராஜா, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, மாவீரன் போன்ற பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த “அமரன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிவகார்த்திகேயனை நம்பி வெங்கட் பிரபு ஏமாந்ததாக கூறப்படுகிறது. அதைப்பற்றி இனி காண்போம்.

விஜய் நடித்து வெற்றி பெற்ற GOAT படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு எனக்கு ஏற்கனவே ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் கமிட்மெண்ட் இருக்கிறது அதனால் சிவகார்த்திகேயன் உடன் ஒரு படம் பண்ண போகிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை தனிமையாக அழைத்து இதுதான் என்னுடைய நிலைமை அடுத்தடுத்து இத்தனை படங்கள் வரிசையாக இருக்கிறது உங்களுடன் படம் பண்ண வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு வருடமாகும் என்று ஓபனாக கூறிவிட்டாராம். இதனால் வெங்கட் பிரபு மிகவும் ஏமாற்றத்துடன் மனவேதனையில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
