தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் அபிநயா. இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கேட்கும் திறனின் சற்று குறையுள்ள இவர் தன்னுடைய 17 வயதில் நடிக்க தொடங்கினார். நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு ஈசன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் கூட விஷாலும் இவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அபிநயா மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அபிநயா, “நான் ஒருவருடன் 15 வருஷமாக ஒருவருடன் relationship ல இருக்கேன். அவர் என்னுடைய சிறுவயது நண்பர். நான் எல்லாமே அவர்கிட்ட பேசுவேன். ரொம்ப இயற்கையான மனிதர். நாங்க பேசி பேசி நாங்க கடைசியில் இந்த ரிலேஷன்கு வந்துட்டோம். அவர் இனிமையானவர். கல்யாணம் குறித்து இன்னும் பிளான் பண்ணல. இன்னும் நெறைய டைம் இருக்கு.

விஷாலுடன் என்னை தொடர்புபடுத்தி பேசினது ரொம்ப தப்பான வதந்தி. யாரும் அதை கண்டுக்காதீங்க. நானும் அதை கண்டுக்கிறது இல்ல. அவங்க வயித்து பொளப்புக்காக எதாவது சொல்லிட்டு போகட்டும். விஷால் ரொம்ப தங்கமான மனுஷன். அவர் கருணை உம் கொண்டவர். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். என்னோட இரண்டாவது படத்துல நடிக்கும்போது நல்லா இருந்துச்சி. second language கத்துக்குறேனு கூட சொன்னாரு” என்று பேசியுள்ளார்.
