வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் தலைமை காவலர் தாமரைச்செல்வி, அவரது கணவர் அர்வினால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தாமரைச்செல்வி, ஆகஸ்ட் 13 இரவு நெல்லூர்பேட்டை வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, மறைந்திருந்த கணவர் அர்வின் அவரைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தானும் நெஞ்சில் குத்திக்கொண்டு காயமடைந்த அர்வினை மீட்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலடைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள அர்வினிடம் உளவுத்துறை மற்றும் சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், இச்சம்பவம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் தலைமை காவலர் ஒருவர் சீருடையிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் தளத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், அரசின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மீதான விமர்சனங்களையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…