ஊஞ்சல் கட்டி விளையாடிய 9 வயது சிறுமி… நொடி பொழுதில் கழுத்தை இறுக்கிய சேலை… வீடு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

Spread the love

வேலூர் அருகே விளையாட்டின் போது சேலை கழுத்தை இறுக்கி 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிஞ்சிபுரம் அருகே உள்ள குடிசை கிராமத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் பழனி – சத்திய பிரியா தம்பதியரின் மகள் ஜீவிதா (9), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று ஜீவிதாவின் தாய் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சிறுமி தனது வீட்டின் ஜன்னலுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையே ஒரு சேலையை ஊஞ்சலாகக் கட்டி விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகச் சேலை சிறுமியின் கழுத்தை இறுக்கியுள்ளது. சத்தமிட முடியாமல் வலியால் துடித்த சிறுமி உதவி கோரி கைகளை அசைத்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அணைக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு எவ்வளவு அவசியம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வேதனையுடன் நினைவுபடுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

2 minutes ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

7 minutes ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

13 minutes ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

13 minutes ago

“அந்த ஒரு காரணத்திற்காக” பால்கனியிலிருந்து ரூ.25 லட்சத்தை அள்ளி வீசிய கணவன்… அதிர்ஷ்ட மழையில் நனைந்த வழிப்போக்கர்கள்… வைரலாகும் வீடியோ..!!

சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற…

37 minutes ago