அதிர்ஷ்டம் கூரையை பிச்சிகிட்டு வரும்னு சொல்றது இதுதானா..? கடன் வாங்கி லாட்டரி சீட்டு வாங்கிய காய்கறி வியாபாரி இப்போ கோடீஸ்வரர்..!!

By Soundarya on கார்த்திகை 6, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்புட்லி பகுதியை சேர்ந்தவர் அமித் சேரா. இவர் வண்டியில் சென்று காய்கறி வியாபாரம் நடத்தி வருகிறார். ஏழ்மையில் இருந்த  இவர் சிலந்த சில தினங்களுக்கு முன்பாக பஞ்சாப் சென்றிருந்தார் . அங்கு மாநில அரசின் சார்பாக தீபாவளியை ஒட்டி லாட்டரி 11 கோடி பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. லாட்டரி சீட்டு வாங்குவதற்கு தேவையான பணம் கையில் இல்லை என்பதால் தன்னுடைய நண்பர் முகேஷ் என்பவரின் உதவியை நாடி உள்ளார். அவர் லாட்டரி சீட்டு வாங்க பணத்தை கொடுத்துள்ளார் .

இதனையடுத்து கடையில் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி நடந்த பம்பர் லாட்டரி பரிசுக்கான  குலுக்கலில் அமித் சேராவுக்கு   11 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார் .மகிழ்ச்சியிலும் துள்ளி குதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” இது எனக்கு கடவுள் கொடுத்த எதிர்பாராத ஆசீர்வாதம். இந்த பணத்தை என்னுடைய இரண்டு குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துவேன். மேலும் இந்த லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்து உதவியாக என்னுடைய நண்பர் மகேஷுக்கு ஒரு கோடி கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.