கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய்க்கும் பாலக்காட்டை சேர்ந்த 36 வயதான நபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அந்த பெண் தன்னுடைய கணவரை பிரிந்து அவரோடு வசித்து வந்தார். அப்போது தாயின் கள்ளக்காதலன் 12 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு மதுபானம் கொடுத்தும் ,ஆபாச படங்களை காண்பித்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து யாரிடமும் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை இருவரும் மிரட்டி உள்ளார்கள். இதனையடுத்து சிறுமி பள்ளிக்கு சென்ற போது தனக்கு நேர்ந்தது குறித்து ஆசிரியர் ஒருவரிடம் கூறிய நிலையில் அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பின்னர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாய் மற்றும் கள்ளக்காதல் இருவரையும் கைது செய்து இருவருக்கும் 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
