Connect with us

ரஜினி இதை செய்யணும்னு ஆசைப்பட்ட வீரப்பன்.. பல வருடங்களுக்கு முன்பு ரஜினி குறித்து வீரப்பன் பேசிய வீடியோ வைரல்..

CINEMA

ரஜினி இதை செய்யணும்னு ஆசைப்பட்ட வீரப்பன்.. பல வருடங்களுக்கு முன்பு ரஜினி குறித்து வீரப்பன் பேசிய வீடியோ வைரல்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினியை. சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படும் ரஜினி பற்றி நக்கீரன் கோபால் சில தகவல்களை பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது. அதாவது kose munisamy veerappan என்ற இணைய தொடர் zee 5 OTT தளத்தில் வெளியாக உள்ளது. இதனை நக்கீரன் கோபாலின் மகள் பிரபாவதி தயாரித்துள்ளார். இந்த தொடரில் வீரப்பனின் வாழ்க்கை படமாக்கப்பட்டுள்ளது. டாக்குமென்ட்ரி வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த இணைய தொடரில் பல வருடங்களுக்கு முன்பு நக்கீரன் பத்திரிகையால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் வீரப்பனின் பேட்டிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

அதில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த எம் ஜி ஆர் ஆக இருப்பார் எனவும் அவர் தனி கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட வேண்டும், யாருக்கும் குடையாக இருக்கக் கூடாது என்று வீரப்பன் பேசிய பேட்டி காட்சியாக இதில் இடம்பெற்றுள்ளது. இந்த இணைய தொடரின் திரையிடல் முடிந்த பிறகு நக்கீரன் கோபால் உள்ளிட்ட படகு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

   

 

அதில், இணையத் தொடரில் வீரப்பன் பேசும்போது கேரள மக்கள் சிலர் தன்னிடம் எப்படி தமிழக மக்கள் நடிகர்களுக்கு வாக்களிக்கிறார்கள் என கேட்டதாக பேட்டி அளித்துள்ளார். மற்றொரு பக்கம் ரஜினி கட்சி ஆரம்பித்து தனியாக போட்டியிட வேண்டும் எனவும் கூறி இருந்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் பற்றி வீரப்பன் பேசியதை அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று கூறியதை இதுவரை நடிகர் ரஜினிகாந்திடம் நான் கூறவில்லை என்றும் நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.

author avatar
Nanthini
Continue Reading
To Top