Connect with us

VIDEOS

“என்ன கேலி, கிண்டல் பண்ணாங்க, எனக்கும் அப்படி நடந்துச்சு”.. மனம் திறந்த ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா..!!

தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அதனைப் போலவே குரூப் டான்ஸ் ஆகவும் பல பாடல்களில் இவர் நடனமாடியுள்ளார். குறிப்பாக அஜித்தின் அவள் வருவாளா என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ருக்கு ருக்கு என்ற பாடலில் இவர் நடனமாடி இருப்பார். அதன் பிறகு இவரை மீண்டும் அடிக்க வைத்தது நெல்சன் தான். கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி அடுத்ததாக எல்கேஜி மற்றும் கூர்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு 46 வயதாகும் நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகை சங்கீதாவை இவர் திருமணம் முடித்தார். சன் டிவி உட்பட பிரபல தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்த பிரபலமானவர்தான் சங்கீதா. அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் சங்கீதா நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் விஜயின் மாஸ்டர் மற்றும் சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், வீட்ல விசேஷம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனது சினிமா பயணம் குறித்து சங்கீதா பேசியுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ஒரு உறவினர் மூலமாக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டுதான் சினிமாவில் முன்னேறினேன். ஆரம்பத்தில் எனக்கு கேலி கிண்டல் என எல்லாமே நடந்தது. இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடித்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் நடித்தேன் என அவர் பேசியுள்ள ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Wow Tamizhaa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wowtamofficial)

author avatar
Nanthini
Continue Reading

More in VIDEOS

To Top