தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக திருமாவளவன் கடந்த சில நாட்களாகவே திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை பல இடங்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளார். ஆனால் கூடுதல் தொகுதிகளை எப்படியும் கேட்டுப் பெறுவோம் என்ற வார்த்தையை மட்டும் கூறி வருகின்றார்.
இந்நிலையில் 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணியை மேலும் வலுப்படுத்த திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்காக ராமதாஸ் தரப்பு பாமக உடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் ஏழு தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக பாமக இடம் பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என திருமா கூறி இருந்தார். இருந்தாலும் போட்டி கடுமையாக இருப்பதால் திருமாவளவனிடம் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே கூடுதல் தொகுதிகளை கேட்டு திருமாவளவன் முரண்பாடு காட்டி வரும் நிலையில் தற்போது பாமகவும் கூட்டணியில் இணைய உள்ளதால் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விலக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
