திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ‘சாதிக்கட்சித் தலைவர்’ என்று விமர்சித்ததைக் கண்டித்து, விசிகவினர் பெரம்பலூரில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ. ராசா, விசிக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சி என்ற தொனியில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விசிகவினர், ஆ. ராசாவை ‘ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலி’ என்று விமர்சிப்பதோடு, அவர் மீது திமுக தலைமை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் கலந்துகொண்டு ஆ. ராசாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். 2ஜி வழக்கை முன்வைத்தும், அவர் மதவாத சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். திமுக மற்றும் விசிக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணியில் நீடித்து வரும் நிலையில், ஆ. ராசாவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சும் அதற்கு எதிரான விசிகவின் போராட்டமும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர்…
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை…
இந்த கொடூரமான குற்றச் சம்பவம் 2019ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று தொடங்கியது. கெவின் பேக்கன் என்ற இளைஞர் காணாமல்…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…