தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். திருப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், விசிக தவெக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், விசிக தலைமை வருகிறதோ இல்லையோ, அக்கட்சியின் தொண்டர்கள் பலரும் தவெகவை நோக்கித் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், பிற கட்சிகளில் இருந்து தொண்டர்கள் வருகை தருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தவெக நிர்வாகியின் இந்த கருத்து விசிக மற்றும் தவெக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
