குடும்பக் கட்டுப்பாட்டுக்கு பிறகு கர்ப்பமான இளம்பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்… கதறும் குடும்பத்தினர்…!

By Nanthini on தை 1, 2026

Spread the love

கோவை மாவட்டம் அம்மன்குளம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (32) என்பவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. சங்கீதாவுக்கு ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சங்கீதா மீண்டும் கர்ப்பம் அடைந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 22ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே ஆபத்து இருப்பதாக கூறி உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சங்கீதாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திடீரென்று சங்கீதா உயிரிழந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் சங்கீதா இறந்ததாக தெரிவித்தனர். சங்கீதாவுக்கு உடல் எடை 80 கிலோ, அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்துள்ளது, அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது.

   

எனவே தாயைக் காப்பாற்ற முடிவு செய்து குழந்தையை வெளியில் எடுத்த மருத்துவர்கள் குழந்தை எடுத்த போதே உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஆறு மாத குழந்தை 800 கிராம் எடை இருக்க வேண்டும், ஆனால் இந்த குழந்தை வெறும் 360 கிராம் மட்டும்தான் இருந்துள்ளது. தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததும் அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மாரடைப்பு உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சங்கீதா உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் ஒரு பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தாலும் அவர் மீண்டும் கர்ப்பமாக 0.5 சதவீத வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.