“அண்ணியாரால் திருமாவுக்கு வந்த சிக்கல்”… தேமுதிகவுக்கு அதிக சீட்… கூட்டணியில் கழற்றிவிடப்படும் கம்யூனிஸ்டுகள்?… அனல் பறக்கும் அரசியல்….!

By Nanthini on பங்குனி 14, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவை கூட்டணியில் இணைக்க கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்காக, ஏற்கனவே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தொகுதிகளைக் குறைக்க திமுக முயல்வதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், இந்த யோசனைக்கு மேற்கண்ட இரு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சியின் வளர்ச்சியை முன்னிறுத்தி 10 தொகுதிகளைக் கோரிய நிலையில், திமுக தரப்பில் 5 இடங்களை மட்டுமே ஒதுக்கத் தீர்மானித்திருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது; இதனால், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக எவ்வாறு இக்கூட்டணி முரண்பாடுகளைச் சமரசமாக முடித்து, தொகுதிகளைப் பகிர்ந்தளிக்கப் போகிறது என்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.