BREAKING: வாயில் கருப்பு டேப்… இழுத்துச் செல்லப்பட்ட வாட்டாள் நாகராஜ்… கர்நாடகா பந்தில் உச்சக்கட்ட பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 13, 2026

Spread the love

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்படுவதைக் கண்டித்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் (பந்த்) போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டிற்குச் சொட்டு நீர் கூடத் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மைசூரு, கொப்பால், அத்திப்பள்ளி போன்ற பல இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதனிடையே, பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்குச் சென்று பேருந்து சேவைகளை முடக்கத் திட்டமிட்ட கன்னட சலவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜை, டாலர்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, தன் வாயில் கருப்பு ‘டேப்’ ஒட்டி அவர் நூதன முறையில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீசார் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள போதிலும், எல்லையோரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுச் சூழல் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் பிஎம்டிசி பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், கடைகள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஓசூர் வழியே பெங்களூருவுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் எந்தவிதத் தடங்கலுமின்றி வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதால், எல்லையோரப் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.