நீங்க ரொம்ப கிரேட் மேடம்…! “திடீரென சுருண்டு விழுந்த முதியவர்…” தேவதையாய் வந்து உயிரை காத்த டாக்டர்… சோஷியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 13, 2026

Spread the love

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள செலாம்பா பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்குச் சிகிச்சைப் பெற வந்த 58 வயது முதியவர் ஒருவர், அங்கே திடீரென சுருண்டு விழுந்து சுயநினைவை இழந்தார். இதைக் கண்டு பதறிப்போகாமல் உடனடியாகச் செயல்பட்ட மருத்துவர் ரிது வாசவா மற்றும் அவரது மருத்துவக் குழுவினர், அந்த நபருக்குத் தாமதமின்றி முதலுதவி மற்றும் சி.பி.ஆர் சிகிச்சையை தொடர்ச்சியாக அளித்தனர்.

மருத்துவர்களின் அதிவேக நடவடிக்கை மற்றும் துரித சிகிச்சையின் காரணமாகச் சுயநினைவை இழந்த முதியவரின் உடல்நிலை சீராகி, அவரது உயிர் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டது. மருத்துவமனையில் நடந்த இந்த நெகிழ்ச்சியான போராட்டம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைதளப் பயனர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.