வாஸ்லின் இனி பேஸ்லின் ஆ?… ஒரே வீடியோவில் கம்பெனி பெயரையே மாற்றிய கொரிய பெண்… ஒரே நாளில் CEO ஆன கொரிய இன்ஃப்ளூயன்சர்…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

சமூக வலைத்தளங்களில் எப்போது எந்த விஷயம் ட்ரெண்ட் ஆகும் என்பதை கணிக்கவே முடியாது. அந்த வகையில், தற்போது பிரபல சரும பராமரிப்பு நிறுவனமான ‘வாஸ்லின்’ தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென் கொரியாவைச் சேர்ந்த மின் டே லீ என்ற பிரபலமான இன்ஃப்ளூயன்சர், வாஸ்லின் தயாரிப்புகளைப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டார். கொரிய மொழியில் ‘V’ எழுத்தை உச்சரிப்பது சற்று சிரமம் என்பதால், அவர் ‘வாஸ்லின்’ என்பதை ‘பேஸ்லின்’ என்று மிகவும் க்யூட்டாக உச்சரித்திருந்தார். இந்த வீடியோ குறுகிய காலத்தில் 36 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் மிகப்பெரிய ட்ரெண்டாக மாறியது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் வாஸ்லின் தயாரிப்புகளை ‘பேஸ்லின்’ என்றே அழைக்கத் தொடங்கினர். இந்த ட்ரெண்ட் வாஸ்லின் நிறுவனத்தின் கவனத்திற்கும் சென்றது. வழக்கமாக தங்களது பிராண்ட் பெயரை தவறாக உச்சரித்தால் நிறுவனங்கள் திருத்துவது அல்லது மறுப்பது வழக்கம். ஆனால், வாஸ்லின் நிறுவனம் மிகவும் நகைச்சுவையாகவும் ஸ்போர்ட்டிவ்வாகவும் இந்த ட்ரெண்டில் இணைந்து கொண்டது. ஒரு வைரல் வீடியோவை பார்த்த பிறகு தீவிர ஆலோசனை செய்து, தங்களது பெயரை ‘பேஸ்லின்’ என்று அதிகாரப்பூர்வமாகவே மாற்றிக் கொண்டதாக ஒரு வேடிக்கையான அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

   

வாஸ்லின் நிறுவனத்தின் இந்த அசத்தலான அணுகுமுறை இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் குழுவை பாராட்டி வருவதோடு, “Love this WS”, “2026-ல் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, வாஸ்லின் நிறுவனம் ஒரு படி மேலே போய், இந்த ட்ரெண்டை உருவாக்கிய கொரிய இன்ஃப்ளூயன்சரான மின் டே லீ-யை, நேர்காணல் எதுவும் இல்லாமலேயே ‘பேஸ்லின்’ நிறுவனத்தின் சிஇஓ-வாக வேடிக்கையாக அறிவித்து நெட்டிசன்களின் மனதை வென்றுள்ளது. வாடிக்கையாளர்களின் நகைச்சுவை உணர்வை மதித்து ஒரு பெரிய நிறுவனம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.