அறிமுகப்படுத்திய வசந்தபாலனையே அடுத்த படத்துக்கு அலையவிட்ட ஜி வி பிரகாஷ்… சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா மொமண்ட்!

By vinoth on ஆனி 18, 2024

Spread the love

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜி வி பிரகாஷும், சைந்தவியும் பள்ளிக் காலம் முதலே நண்பர்கள். ஜி வி இசையமைப்பாளராக ஆனதும் சைந்தவிக்கு அதிக பாடல்களைக் கொடுத்தார்.

அதிலிருந்து வெளிவந்து இப்போது இருவருமே தங்கள் தனிவாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் கவனம் செலுத்துகின்றனர். ஜி வி பிரகாஷ் தன்னுடைய 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை எப்படி அவர் அவ்வளவு சின்ன வயதில் இசையமைத்திருப்பார் என ஆச்சர்யப்பட்டனர்.

   

அந்த படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே மருகுதே’, ‘வெயிலோடு உறவாடி’ போன்ற பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த படத்தின் வெற்றியாலும் பாடல்கள் பெற்ற கவனத்தாலும் ஒரே படத்தில் முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த பாலனின் அடுத்த படமான அங்காடித் தெரு படத்துக்காக அவர் ஜிவியை அணுகிய போது பாடல்கள் தராமல் இழுத்தடித்துள்ளார்.

   

இதுபற்றி ஒருநேர்காணலில் பகிர்ந்துள்ள வசந்தபாலன், “வெயில் படத்தின் வெற்றி ஜி வி யை ஒரே நாளில் முன்னணி இசையமைப்பாளராக்கிவிட்டது. அடுத்தடுத்து அஜித்தின் கிரீடம், ரஜினியின் குசேலன், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் பிஸியாகிவிட்டார். நான் அவரை பார்க்க சென்றால் அவருக்காக முன்னணி இயக்குனர்கள் அங்கே காத்திருப்பார்கள்.

 

என்னால் அவரிடம் ஒரு சூழலை சொல்லி பாட்டு வாங்க முடியவில்லை. ஒருகட்டத்தில் நாங்கள் சுமூகமாகப் பேசி பிரிந்துவிட்டோம். அதன் பின்னர் அந்த படத்தின் சில பாடல்களை விஜய் ஆண்டனி இசையமைத்தார்.” எனப் பகிர்ந்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு சரியாகி அதன் பின்னர் இருவரும் ஜெயில் என்ற படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். அந்த படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.