நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..

By Ranjith Kumar on மாசி 19, 2024

Spread the love

சீரியலில் இருந்து அசிஸ்டெண்ட் டைரக்டராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் வருண் தவான். ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த வருண் தவான், அதன்பின்னர் நடிப்பில் பிஸியாகிவிட்டார். ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், மெயின் தேரா ஹீரோ, பத்லாபூர், தில்வாலே, டிஷ்யூம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது

பாலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வரும் வருண் தவான், விரைவில் தெறி இந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படமான தெறி சூப்பர் ஹிட் அடித்தது. அதன் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார் வருண் தவான். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாங்கள் கர்ப்பம் ஆகியுள்ளதாக பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

   

நடாஷா தலால் என்பவரை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் வருண் தவான். திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி ரொமான்ஸ் மூடில் டூர் சென்று வந்தனர் வருணும் நடாஷாவும். இந்நிலையில் தற்போது நடாஷா தலால் கர்ப்பம் ஆகியுள்ளதாக வருண் தவான் அறிவித்துள்ளார்.

   

  இதுபற்றி இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ள அவர், “நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் “We Are Pregnant” என்று சொல்வது தம்பதிகளின் வழக்கம். ஆனால், இந்தியாவில் ஒரு ஆண் கர்ப்பம் ஆகியுள்ளதாக சொன்னால் அதில் பல கேலியும் கிண்டலும் வரும். அதனை முறியடிக்கும் விதமாக ‘நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார் வருண் தவான். சமூக மாற்றத்திற்கும், பெண்ணுக்கு சம உரிமை கொடுக்கும் அளவிற்கு அவர் செய்துள்ள இந்த காரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)