வரிச்சூர் செல்வம், அடிக்கடி மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் ஒருவராக இருக்கிறார். எப்போதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டிருப்பவர். ஒரு நேர்காணலில் வரிச்சூர் செல்வம் கூறியதாவது, ஒருநாள் ஷூட்டிங் முடிச்சிட்டு விஜய், ஏர்ப்போர்ட்டில் இருக்கிறார். அப்போ எட்டரை மணி இருக்கும். நான் பாராமவுண்டன் பிளைட்டுக்காக வெயிட் பண்ணீட்டு இருந்தேன். அங்க இருக்கறவங்க சொல்றாங்க, விஜய் இருக்காருன்னு.

நான் போய் பார்த்தப்போ, இன்னோவா காருக்குள்ள உட்கார்ந்துட்டு, காதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டு பாட்டு கேட்டுட்டு இருந்தாரு. அப்போ நான் முடியை எல்லாம் கொஞ்சம் விரிச்சு போட்டுட்டு பார்க்க பயங்கரமா தான் இருந்தேன். கார் மேல ரெண்டு கையையும் விரிச்சு வெச்சுட்டு என்னங்க விஜய் நல்லா இருக்கீங்களா அப்படீன்னு கேட்டேன். என்னை பார்த்த ஒடனே, விஜய் பதட்டம் ஆயிட்டாரு, யார்ரா இது இப்படி வந்து நிக்கிறதுன்னு, அப்புறம் நல்லா இருக்கீங்களான்னு என்னை கேட்டார்.

நல்லா இருக்கறேன் விஜய் சார். ஒண்ணு இல்ல, இந்த வில்லன்களை போட்டு இப்படி அடிக்கறீங்களே, படத்துல 10, 15 வில்லன்களை போட்டு அடிக்கறீங்க, அது எனக்கு புடிக்கலே. தயவுசெஞ்சு இனிமே கொஞ்சம் கம்மியா அடிங்க என்றதும், அவர் சிரித்து விட்டார் என்று இந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். படத்தில் நிழல் ரவுடிகளை பார்த்து சண்டை போடும் விஜய், நிஜத்தில் வில்லன் நடிகரை போன்ற தோற்றத்தில், கழுத்து நிறைய நகை சங்கிலிகளுடன் திடீரென எதிரில் வந்து நின்ற வரிச்சூர் செல்வத்தை பார்த்து, சற்று ஷாக் ஆகி இருக்கிறார் என்பதுதான் உண்மை.
