“உங்களப்பத்தி நல்லா தெரிஞ்ச நானே உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க பிரதீப்”.. வெளியில் வந்த ஐஷு உருக்கம்..

By Begam on கார்த்திகை 19, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் வீட்டில்  மிகுந்த எதிர்பார்ப்புடன் நுழைந்து மாயா gang -ல் சேர்ந்து தனது பெயரை  முழுவதுமாக கெடுத்துக் கொண்டவர் தான் ஐஷு. மேலும் இவர் நிக்சனுடன் விளையாடிய காதல் விளையாட்டும் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. இவர்கள் பிக் பாஸ் வீட்டில் குறுக்கே கண்ணாடி இருக்க இருவரும் மாறி மாறி முத்தம் குடுத்து கொண்டது,

   

இதைத்தொடர்ந்து ஐஷு வேட்டி அணிந்திருக்க அதை சரிசெய்ய நிக்சன் முழங்கால் வரை தூக்கி கையை விட்டு சரி செய்தது என பல எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டனர். இப்படி ஒரு பக்கம் நிக்சனின் சேர்க்கை, மறுபுறம் மாயா gang உடன் சேர்க்கை என ரசிகர்களின் வெறுப்பை மொத்தமாக சம்பாதித்தார் ஐஷு. இதனால் அவர் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகள் பெற்று கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

 

இந்நிலையில் அவர் முதன் முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டில் தான் செய்த அனைத்து தவறுகளுக்கும் மொத்தமாக மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பாக பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்ததற்காக அவருடன் மன்னிப்பும் கேட்டுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததற்காக உண்மையிலேயே நான் வருந்துகிறேன். அவருடைய நல்ல நோக்கங்களை இப்போது நான் புரிந்து கொண்டேன். சில நட்புகள் தவறான தொடர்புகள் மற்றும் நான் எடுத்த தவறான முடிவுகள் என்னை குருடாக்கிவிட்டது. எது சரி, எது தவறு என்று தெரிந்தும் உண்மையை கவனிக்க நான் தவறிட்டேன்’ என்று பகிரங்கமாக மன்னிப்புக்கு கேட்டுள்ளார். இதோ அந்த பதிவு…