திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்கீஸ் உயிரிழந்தார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை திமுக பிரமுகர் கதிரவனை கடத்தி பணம் பறித்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இரண்டாவது நாளே அவர் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் சிறைச்சாலை பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
