நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது திருமண மற்றும் ரிசப்ஷனை முடித்துவிட்டு காதல் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகள் என்று அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தார தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, இரவின் நிழல், சண்டக்கோழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

#image_title
கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகின்றார். தற்போது தமிழை தாண்டி தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வீரசிம்ஹா ரெட்டி, ஹனுமன் உள்ளிட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 1ம் தேதி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
அதையடுத்து இவர்கள் வெளிநாட்டிற்கு சென்ற புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகி வைரலாகி வந்தது. இதைத் தொடர்ந்து நடிகை வரலட்சுமி பல பேட்டிகளில் தங்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவதாக தெரிவித்திருந்தார். மேலும் நிக்கோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இது குறித்து வரலட்சுமி விளக்கம் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திருமண தேதியை அறிவித்தார்கள். அதன்படி ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. பின்னர் ஜூலை மூன்றாம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடைபெற்றது. இதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
திருமணத்திற்கு பிறகு தற்போது வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலய் சச்தேவ் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார் வரலட்சுமி. இவர்கள் எந்த நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தனது காதல் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த வரலட்சுமி புயலுக்குப் பின் அமைதி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.