பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் தான் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் டிரைலரும் மூன்று பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியன் 2 படம் 3 மணி நேரம் 4 நொடிகள் நீளம் கொண்டது. இந்த நிலையில் சென்சார் வாரியம் இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளது.
மேலும் ஐந்து முக்கிய மாற்றங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளது. அது என்னவென்றால் புகைபிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை கருப்பு நிறத்தில் மிகவும் பெரிதாக வெள்ளை நிற பின்னணியில் வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இரண்டாவதாக ஒரு காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிள்களை அகற்ற வேண்டும்.
மூன்றாவதாக குறைந்த ஆடைகள் கொண்ட அல்லது ஆடை இல்லாத நடிகர்கள் தோன்றும் காட்சியில் மாற்றம் செய்ய வேண்டும் அல்லது அதனை நீக்க வேண்டும். நான்காவதாக டர்ட்டி இந்தியன் உள்ளிட்ட சில கெட்ட வார்த்தைகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும். கடைசியாக படத்தில் வரும் காப்புரிமை பெற்ற விஷயங்களுக்கு NOC தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதால் அடுத்தடுத்த மாற்றங்களை செய்ய வேண்டும் என ஷங்கர் திணறி வருகிறார்.