நான் தான் இந்த பாட்டு பாடுவேன் அடம்பிடித்த கண்ணதாசன் ; மறுத்த எம்.எஸ்.வி

By Deepika on பங்குனி 23, 2024

Spread the love

 

சினிமா தெரியாதவர்களுக்கு கூட கண்ணதாசன் என்றால் தெரியும். பல தலைமுறைகள் கடந்தும் கண்ணதாசனும் அவர் பாடல்களும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. எந்த சூழ்நிலைக்கும் பாடல் எழுதும் ஒரு கலைஞர் அவர். குறிப்பாக தத்துவ பாடல்கள், சோக பாடல்கள் என்றால் அந்த காலத்து இயக்குனர்களின் முதல் சாய்ஸ் கண்ணதாசன் தான்.

   

Kannadasan and sivaji

   

சிவாஜி கணேசனுக்கு ஹிட் கொடுத்த பல பாடல்களை இயற்றியவர் கண்ணதாசன் தான். சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் உள்ள நட்பு வார்தைகளால் சொல்ல முடியாதது. பொதுவாக கண்ணதாசன் பாடல்கள் என்றால் அதை பாடுவது டி.எம்.சவுந்தர்ராஜனாக தான் இருக்கும். கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்களை அவர் தான் பாடியுள்ளார்.

 

Vantha naal muthal song

1961 ஆம் ஆண்டு சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்ரி நடிப்பில் வெளிவந்த படம் பாவமன்னிப்பு. இந்த படத்தில் இடம்பெற்ற வந்த நாள் முதல் இந்த நாள் வரை என்ற பாடலை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சிவாஜி சைக்கிள் ஓட்டிய படி பாடும் இந்தப்பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப்பாடலை கூட கண்ணதாசன் தான் எழுதினார்.

MSV and kannadasan

ஆனால் கண்ணதாசன், இந்த பாடலை எழுதி முடித்தவுடன் நான் தான் இதை பாடுவேன் என அடம்பிடித்துள்ளார். ஆனால் நீங்கள் பாடினால் அது நன்றாக இருக்காது, மேலும் சிவாஜிக்கு பொருத்தமாக இருக்காது என கூறி தவிர்த்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன். கண்ணதாசன் எப்போதும் எழுதி முடித்தவுடன் அவர் வேலை முடிந்துவிடும், ஆனால் இந்த ஒரு பாடலை மட்டும் தான் பாட வேண்டும் என அவர் விரும்பியது ஆச்சர்யம் தான். கண்ணதாசன் மறைந்தாலும் அவர் இன்றும் நம் மனங்களில் வாழ்ந்து வருகிறார்.