பாஜகவை விமர்சிப்பதைத் விடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் குறிவைத்து விமர்சிப்பதிலேயே திமுக முனைப்பு காட்டி வருவதாக அமைச்சர் வன்னியரசு கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புரையாற்றிய அவர், “கடந்த காலங்களில் நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்பட்டோம். ஆனால், இன்று நாங்கள் எடுத்துள்ள முடிவு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், தமிழ் தேசிய அரசியல் மற்றும் தமிழர் உரிமைகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்டதாகும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், ஆட்சியின் கொள்கைகள் குறித்துப் பேசிய அவர், இருமொழிக் கொள்கை மற்றும் மசோதாக்கள் குறித்த நிலைப்பாட்டில் முந்தைய ஆட்சியைப் போலவே தற்போதைய அரசும் உறுதியோடு செயல்படுவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான FCRA மசோதாவிற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டமன்றத்தில் ‘சோஃபா மாடல்’ என்ற பேச்சு எழுந்ததற்குப் பதிலளித்த வன்னியரசு, சமூகச் சமத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். “எப்படி வக்பு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ, அதேபோலத் தான் FCRA மசோதாவிலும் செயல்பட்டுள்ளோம். கிராமங்களில் ஒருவர் புதிதாக வீடு, கார் அல்லது வெள்ளைச் சட்டை அணிந்தாலே பொறாமையோடு பார்ப்பது போலத்தான், எங்கள் வீட்டில் புதிய சோஃபா வந்ததையும் விமர்சிக்கிறார்கள். எல்லோரையும் சமமாக உட்கார வைப்பதும், சால்வை அணிவித்து மரியாதை செய்வதுமே உண்மையான சமத்துவம்; உங்க வீட்டில் மட்டும் தான் சோஃபா இருக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.
இறுதியாக திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்களின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதை விட்டுவிட்டு, விசிகவையும் சமூக நீதித்துறையையுமே திமுக தோழர்களும் ஆதரவு யூடியூப் சேனல்களும் முழு நேரமாகக் கண்காணித்து விமர்சித்து வருகின்றன. 100 நாட்களில் நாங்கள் சாதனைப் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், உண்மையான எதிரியை விட்டுவிட்டு திமுக எதை நோக்கிச் செல்கிறது?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…