விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்தவர். மணிமேகலை சமீபத்தில் மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். இதற்கு அக்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு தான் காரணம். ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் பேசியதாவது, மணி நீ வளர்ந்து வர பொண்ணு. நல்ல வளர்ந்து கொண்டு இருக்க. உனக்கு நல்ல புருஷன் கிடைச்சிருக்காரு. உன் லைப் நல்லாதான் இருக்கு.
இன்னொரு நபரோட லைப் நம்ம கண்ணு முன்னாடி, இன்னொருதங்க தப்பா பேசுறாங்க அப்படிங்கும் போது அதை என்கரேஜ் பண்ணாத. சொம்பு தூக்கி அடிக்கிறது நல்லா இல்ல. ரெண்டு பொம்பளைகளுக்கு இடையில சண்டை போட்டுக்கிறாங்க. அதுக்காக ஒரு கேரக்டரை பத்தி பேசுறது தப்பு. அந்த சேனல்ல என்ன நடக்குது, அவங்க என்ன தொழில் பண்ணாங்க அப்படியெல்லாம் பேசுறாங்க. ஒரு பொண்ணு அப்படிங்கறதனால அவங்கள தாழ்த்தி பேசுறாங்க. அவங்க கேரக்டரை தப்பா பேசுறது ரொம்ப ரொம்ப தப்பான விஷயம். எனக்கு பிரியங்கா கால் பண்ணி பேசினாங்க. அவங்க இங்க இல்ல. அவங்க அயர்லாந்தில் இருக்காங்க.
சில பேர் அவங்க ஓடி போய்ட்டாங்கன்னு கூட சொல்லி இருக்காங்க. குக் வித் கோமாளி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அப்புறம் நானும் உடனே அப்ராட் தான் போனேன். அவங்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். சென்னையில அவங்களால எங்கேயும் போக முடியாது. அவங்களுக்கு ஒரு பிரீடம் இருக்காது. அதனால அந்த பொண்ணு முன்னாடியே டிக்கெட் போட்டு அயர்லாந்து போய் இருக்காங்க. ரொம்ப அழுறாங்க. அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அவங்களோட வலி தெரியலன்னா பொண்ணா இருந்து பிரயோஜனமே கிடையாது. அவங்க ரொம்ப அழுகுறாங்க. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா.
நீங்க வேணும்னா கேட்டு பாருங்க அக்கா. அந்த மாதிரி கிடையாது அப்படின்னு சொல்றாங்க. நடந்தது நடந்திருச்சு. ஆனால் ஏன் இவ்வளவு டேமேஜ் பண்றாங்க. ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன சண்டை. அதுக்கு போய் புருஷனை இழுக்குறாங்க. டைவர்ஸ் இழுக்குறாங்க. அவங்க அந்த கம்பெனியில் யாரோட இருந்தாங்க அப்படி எல்லாம் பேசுறாங்க. அந்த கம்பெனியில் அப்படி யாருமே கிடையாது. உண்மையா எனக்கு தெரியும். எல்லாரையுமே எனக்கு தெரியும். இவர்கள் யாரை பத்தி பேசுறாங்கன்னு எனக்கு தெரியல. ஹேமா கமிட்டி ரோகினி மேடம் இங்க எடுத்து இருக்காங்க. அவங்க இம்மீடியட்டா ஆக்சன் எடுத்திருக்காங்க. ஒரு பத்திரிக்கையாளர் பேசுனதுக்கு. நான் அவங்கள சல்யூட் பண்றேன் என பேசியுள்ளார்.