பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா…? எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா…?

By Meena on செப்டம்பர் 24, 2024

Spread the love

வீட்டில் விளக்கு ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். எந்த ஒரு பூஜை ஆனாலும் விளக்கேற்றிவிட்டு தான் தொடங்குவோம். விளக்கு ஏற்றுவதில் பலவித சாஸ்திர சம்பிரதாயங்கள் இருக்கிறது. அப்படி பல நன்மைகளை நமக்கு கொடுக்கும் வல்லமை பெற்ற பஞ்சகவ்ய விளக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த விளக்கு ஏற்றுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.

   

ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ ஒரு சிலர் ஹோமங்கள் நடத்துவார்கள். அப்படி நடத்துவதால் குடும்பத்தில் உள்ள துன்பங்கள் விலகி கண் திருஷ்டி மனக்கஷ்டங்கள் போன்றவை நீங்கி நன்மை பெருகும் என்பது ஐதீகம். நம் வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையான பலன்களை கொடுக்கக் கூடியது பஞ்சகவ்ய விளக்கு. வீட்டில் பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும் போது அதிலிருந்தும் வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும். இந்த பஞ்சகவ்ய விளக்கில் இருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவ செய்வதினால் எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி நேர்மறை ஆற்றல்களை உள்ளிழுத்து பணப்புழக்கத்தையும் நன்மைகளையும் அதிகரிக்கச் செய்யும்.

   

பஞ்சகவ்ய விக்கானது பசுவிலிருந்து கிடைக்கும் பால், நெய், கோமியம், தயிர், சாணம் ஆகிய ஐந்து பொருட்களுடன் சில மூலிகைகளை சேர்த்து செய்யப்படுகிறது. பசுமாட்டில் தான் 30 முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். பால் நெய் தயிர் போன்றவற்றில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் இந்த பஞ்சகவ்ய விளக்கை ஏற்றும் பொழுது அனைத்து தேவர்களும் மகாலட்சுமியின் அருளும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

பஞ்சகவ்ய விளக்கை எப்பொழுது ஏற்றுவது எப்படி ஏற்றுவது என்பதை பற்றி பார்ப்போம். பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை, வாழை லை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைக்க வேண்டும். பின்பு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பஞ்சகவ்ய விளக்கின் திரி எறிந்த பின்பு விளக்கும் சேர்த்து எரிய ஆரம்பிக்கும். விளக்கு முழுவதுமாக எரிந்த பின்பு அதிலிருந்து புகை வெளிவர ஆரம்பிக்கும். அந்த புகையை நாம் வீடு முழுவதும் காட்டலாம். இப்படி செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறும். விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் தெய்வீக விபூதிக்கு சமமானதாகும். இந்த திருநீரை பூசிக் கொள்வதாலும் நன்மைகள் ஏற்படும்.

பஞ்சகவ்ய விக்கை கிருத்திகை அமாவாசை பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏற்றுவதால் கோ பூஜை மற்றும் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்கும் ஹோமம் நடத்தியாதற்கும் சமமாக கருதப்படுகிறது. வீட்டில் கன்றுடன் கூடிய பசுவின் படம் அல்லது கோமாதா படத்தின் முன்பு இந்த விளக்கை ஏற்றியும் வழிபடலாம். தொடர்ந்து பஞ்சகவ்யா விளக்கை ஏற்றி வரும்போது நம் வீடு நேர்மையாற்றல்களால் நிரம்பும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் சண்டை சச்சரவு கடன் பிரச்சனைகள் கண் திருஷ்டி நோய் தொந்தரவுகள் போன்றவைகள் இந்த பஞ்சகவ்ய விளக்கு ஏற்றும் போது இவை எல்லாம் விலகி நம் நினைத்தது நடக்க ஆரம்பிக்கும் என்று நம்பப்படுகிறது.