இவ பண்ண வேலையால கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க.. அதான் படிப்பு வேண்டாம்னு சொல்லி நிப்பாட்டிட்டேன்.. மகளை பற்றி ஓப்பனாக பேசிய வனிதா..!!

By admin on ஆவணி 12, 2024

Spread the love

நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே வனிதா நடித்துள்ளார். இப்போதும் வனிதா படங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸில் விசித்திரா அடிப்படை கல்வி அவசியம் என கூறினார்.

   

அதற்கு எதிராக பேசிய ஜோதிகா தனக்கு படிப்பு வராததால் தான் படிப்பை நிறுத்தினேன். ஒரு விஷயம் பிடிச்சா செய்யணும். பிடிக்கலன்னா செய்யக்கூடாது. அப்படித்தான் எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன் என சண்டை போட்டார். அந்த விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் வனிதா விஜயகுமார் தனது மகளுடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

   

Actress Vanitha Vijayakumar

 

அப்போது வனிதா கூறியதாவது, ஜோவிகா ஸ்கூல்ல இருந்து என்ன கூப்பிட்டாங்கன்னா நான் பயந்துகிட்டே தான் போவேன். ஏன்னா அவர் பண்ண காரியம் அப்படி. நான் ஸ்கூலுக்கு போனா கன்ஃபார்மா உங்க பொண்ண கூட்டிட்டு போயிருங்க அப்படின்னு தான் சொல்லுவாங்க. அவளை நான் நிறைய ஸ்கூல் மாத்திட்டேன். கடைசியாக ஸ்கூல் பிரின்சிபல் என்ன கூப்பிட்டாரு. நானும் அங்க போனேன். ஜோவிகா கிளாஸ்க்கு உள்ள நுழைஞ்சேன்.

 

அப்போ கடைசி பெஞ்ச் அடியில உட்கார்ந்து காதை பொத்திகிட்டு இருந்தா. என்னன்னு கேட்கும்போது இங்க ரொம்ப சத்தமா இருக்கு. என்னால இங்க இருக்கவே முடியாது அப்படின்னு சொன்னா. இப்படி எல்லா வேலையும் ஜோவிகா பண்ணிருக்கா. நானே அவகிட்ட உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டேன். அதுக்கு ஜோவிகா நான் நடிக்கணும் அப்படின்னு சொன்னா. ஒரு பெரிய ஜோவிகாவுக்கு ஆசை என மகளை பற்றி வனிதா கூறியுள்ளார்.