ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்ட கங்குவா.. வெளியானது மாஸ் ட்ரெய்லர்..!!

By Nanthini on ஆவணி 12, 2024

Spread the love

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இந்த வருடம் தங்கலான் மற்றும் கங்குவா என விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் கங்குவா.

   

மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.