‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’…? kpy பாலாவிற்கு முத்தம் கொடுத்து வாழ்த்திய வனிதா விஜயகுமார்…

By Begam on புரட்டாதி 18, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது.

   

தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

   

 

தற்பொழுது இவர் kpy பாலாவிற்கு முத்தம் கொடுத்து வாழ்த்திய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது kpy பாலா இதுவரை 3 அம்புலன்சுகள் தனது சொந்த செலவில் வாங்கி கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்துள்ளார். இது நாம் அனைவரும் அறிந்ததே. இதைத்தொடர்ந்து சமீபத்தில் கூட  125 விவசாயிகளுக்கு 3 லட்சம் செலவில் தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்திருந்தார். அவரின் இந்த சேவையை பாராட்டி நடிகை வனிதா இவ்வாறு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…