இளையராஜா வீட்டுக்கு மருமகளா போக வேண்டியவள் நான்… உங்க காலில் விழுந்தேன்… பாடல் விவகாரத்தில் பதிலடி கொடுத்த வனிதா ..!!

By Soundarya on ஆடி 12, 2025

Spread the love

நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகள் ஜோவிகா தயாரிப்பில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரைக்கு வந்தது. அந்த படத்தில் ராத்திரி சிவராத்திரி என்ற பாடலை தன்னுடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த பாடலை உடனே நீக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வனிதா மக்கள் தங்களுடைய படத்தை வந்து பார்க்க வேண்டும் என்று கண்ணீரோடு பேசியிருக்கிறார். மேலும் இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் இளையராஜாவுடன் இந்த பாடலை  பயன்படுத்த தனிப்பட்ட முறையில் பேசினேன் . என் மகள் உடன் சென்று காலில் விழுந்தேன். ஓகே என்று தான் சொன்னார். அதன்பின் சோனி நிறுவனத்திடம் அனுமதி வாங்கினேன். நான் நேரில் சென்று கேட்கும் போதே திட்டியிருக்கலாம். இப்போ வந்து வழக்கு மட்டும் போடுகிறார்கள்.  சின்ன வயதில் இருந்தே நான் அவருடைய வீட்டில் வளர்ந்திருக்கிறேன். அவர் வீட்டுக்கு நான் மருமகளாக போக வேண்டியவர்” என்று கூறியுள்ளார்.