Categories: சினிமா

அந்தப் போட்டியாளருக்கு பெண்கள் சப்போர்ட் இல்ல, ஆனா அழுதே கப் அடிச்சிடுவாங்க போல.. வனிதா விஜயகுமார் ஓபன் டாக்..!

Spread the love

மக்கள் அதிகம் விரும்பும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. நம் மனதிற்கு பிடித்த பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கே தனி கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிரிப்பு, அழுகை மற்றும் சண்டை என அனைத்துமே இருக்கும். கடந்த ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், முதல் ஆளாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சாச்சனா, தர்ஷா குப்தா, தீபக், அரன்வ், ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்ட 18 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இதில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா வெளியேறினார்.  இனி ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியை மிக பரபரப்பாக செல்லும் என்பதால் குறிப்பாக விஜய் சேதுபதிக்காக நிகழ்ச்சியை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் Vs வனிதா நிகழ்ச்சியை நடிகை வனிதா விஜயகுமார் தொடங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேட்மேன் உள்ளிட்ட அனைவருக்கும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து உள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் ஜாக்குலின் அவர்களுக்கு பெண்கள் சப்போர்ட் கிடையாது. அதனால் ஆண்கள் சப்போர்ட்டை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.

முத்துக்குமார் ஒருவரை வைத்து மொத்த ஆண்கள் சப்போர்ட்டும் இவருக்கு கிடைத்துவிடும் என நினைக்கிறார். எந்த இடத்தில் எப்படி காய் நகர்த்த வேண்டும் என்று ஜாக்லீனுக்கு நன்றாக தெரிகிறது. போன சீசனில் ஒரு பொண்ணு அழுது அழுது கப்பு வாங்கிட்டு போயிட்டா. அதனைப் போலவே இந்த சீசனிலும் அழுது கப்பு வாங்கிறலாம் என பிக் பாஸ் வீட்டில் பெண்கள் நினைக்கிறார்கள். இந்த சீசனில் அப்படி நடக்குமா என்று தெரியாது. உண்மையாக அவர்கள் அழுவது போல எனக்கு தெரியவில்லை. ரொம்பவும் முடியாத சூழ்நிலையில் மட்டுமே எமோஷனலை வெளிப்படுத்தி அழுவது சிறந்தது. ஏன் அழுந்து கப்பு வாங்க வேண்டும் என்று நினைக்கிறீங்க, சண்டை போட்டு கப்பு வாங்குங்க என்று வனிதா விஜயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

42 minutes ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

1 மணத்தியாலம் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

1 மணத்தியாலம் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

1 மணத்தியாலம் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

1 மணத்தியாலம் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago