ஜோவிகாவின் உண்மையான அப்பா இந்த பிரபல நடிகர் தான்.. முதன்முறையாக மனம் திறந்த வனிதா (வீடியோ)..

By Priya Ram on அக்டோபர் 15, 2023

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் வாரத்திலேயே வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமாருக்கும் விசித்ராவுக்கும் இடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து எழுந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

   

மேலும் ஜோவிகா ஏன் விஜயகுமார் பெயரை பயன்படுத்துகிறார் என சமூக வலைதள பக்கத்தில் பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக வனிதா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் எனக்கும் முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்தவர்தான் ஜோவிகா.

   

 

ரன்வீர் கபூர், ஷாருக்கான் போன்றவர்கள் பரம்பரை பெயரை பயன்படுத்தினால் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் ஜோவிகா விஜயகுமார் என்று பயன்படுத்தியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்து ஜோவிகா விஜயகுமார் என்று தான் பயன்படுத்தி வருகிறோம். அனைத்திலும் A.ஜோவிகா விஜயகுமார் என்று தான் இருக்கிறது. ஜோவிகா பிறக்கும்போதே நான் தனியாக இருந்ததால் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எனது அப்பாவின் பெயரை பயன்படுத்தினோம் என வனிதா கூறியுள்ளார்.