மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நேற்று 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மலேசிய பிரதமர் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது “இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்ற திருக்குறளை மலேசியா பிரதமர் பேசினார்.
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்க கருவூலத்திற்கு வருவாயை பெருக்கி அதனை பாதுகாப்பாக திட்டமிட்டு செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் என்பதுதான் அந்த திருக்குறளின் பொருள். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி, மார்டன் சொசைட்டி என்ற பெயரில் சிலர் தமிழ் மொழியை ஒதுக்கி வைக்கின்றனர். ஆனாலும் பல முக்கியமான இடங்களில் முக்கிய பிரபலங்கள் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசுகின்றனர்.
அப்படி இருக்க திருக்குறளை அதன் உவமையோடு மலேசிய பிரதமர் கூறியது நாடாளுமன்ற அவையில் இருந்த இந்திய எம்பிக்கள் மற்றும் மேலவை உறுப்பினர்களை பரவசமடைய செய்தது. ஒரு அரசாங்கம் தூய்மையாக இருக்க வேண்டும்? நாட்டின் வருவாய் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும். நல்லாட்சியை வழங்க வேண்டும் என மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.