தேசிய கீதத்திற்கு முன் வந்தே மாதரம் கட்டாயம்… இனி 6 பத்திகளையும் பாட வேண்டும் – ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு…!!

By Soundarya on மாசி 11, 2026

Spread the love

ஒன்றிய உள்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள 10 பக்கங்கள் கொண்ட புதிய வழிகாட்டுதலின்படி, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு (ஜன கண மண) முன்பாக வந்தே மாதரம் பாடலைப் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இப்பாடலுக்கான அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை வகுத்துள்ள அரசு, பாடலின் அனைத்து 6 பத்திகளையும் (சுமார் 3 நிமிடம் 10 வினாடிகள்) முழுமையாகப் பாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் உரைக்கு முன்னும் பின்னும், மற்றும் அனைத்துப் பள்ளிகளின் காலை வழிபாட்டுக் கூட்டங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்தைப் போலவே, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும்போதும் அல்லது பாடப்படும்போதும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். ஒரு நிகழ்ச்சியில் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் ஆகிய இரண்டும் இடம்பெறும்போது, வந்தே மாதரம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும்.