என்னை எதிர்த்து போட்டியிட்ட கமல் கட்சி இப்பொழுது எங்கே இருக்கிறது? அதுபோல விஜய் கட்சியினர் என்னை எதிர்த்து போட்டியிட்டால் எங்கு இருப்பார்கள்? என்று நான் அப்புறமாக சொல்கிறேன் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், என்னை எதிர்த்து போட்டியிட்ட கமல் கட்சி இப்போது எங்கே உள்ளது.
திமுகவில் தான் இருக்கிறது. அதேபோல என்னை எதிர்த்து விஜய் கட்சி போட்டியிட்டால் அவர்கள் எங்கே இருப்பார்கள் என்று அடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்கிறேன். இன்னும் ஒரு மாத காலத்தில் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும். தமிழகத்தில் நாங்கள் பலமாக உள்ளோம். திமுகவுடன் இருக்கும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எல்லாம் பெரிய கட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
