BREAKING: தமிழக பாஜகவில் திடீர் மாற்றம்?… நயினார் நாகேந்திரனுக்குப் பதில் வானதி ஸ்ரீனிவாசன்… அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு….!

By Nanthini on ஆனி 12, 2026

Spread the love

தமிழக பாஜகவில் அதிரடி மாற்றமாக, தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைவில் பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக மாநில மையக் குழு கூட்டத்தில், தமிழகத்தின் புதிய தலைமை மாற்றம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

   

இந்த புதிய தலைவர் பந்தயத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், ராம சீனிவாசன் மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், கட்சியின் தேசிய அளவிலான அனுபவம் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் வானதி ஸ்ரீனிவாசனுக்கே மாநிலத் தலைவர் பதவியைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.