BREAKING: லெஜெண்ட் மாரடைப்பால் காலமானார்… சற்றுமுன் சோகம்…..!

By Nanthini on ஆனி 12, 2026

Spread the love

இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் ஜாம்பவானும், பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகள் பெற்ற சாதனையாளருமான ஜஸ்பால் ராணா (49) அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி விளையாட்டு உலகை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது அசாத்திய திறமையால் உலக ஜூனியர் தொடரில் தங்கம், காமன்வெல்த் போட்டிகளில் 9 தங்கம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கப்பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்தவர் ஆவார்.

ஒரு தலைசிறந்த வீரராக மட்டுமன்றி, சிறந்த பயிற்சியாளராகவும் விளங்கிய இவரின் வழிகாட்டுதலின் கீழ்தான் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்; அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம். #RIP