ஐயப்பனை பார்க்க பாதயாத்திரை சென்ற பக்தர்கள்… நடுவழியிலேயே காத்திருந்த எமன்… அதிகாலையில் நடந்த துயர சம்பவம்…!

Spread the love

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மேல தெருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்ற குருசாமி தலைமையில் சபரிமலைக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி மாரி சாமி (55) தலைமையில் ராம்கி (35) மற்றும் ஏழு பேருடன் ஆண்டிப்பட்டியிலிருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை அவர்கள் சின்னமனூர் அருகில் உள்ள பகுதியில் வந்து கொண்டிருந்த போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலப்பாடியூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த சிவக்குமார் (34) என்பவர் வேனில் ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் மற்றவர்கள் முன்னே சென்றுவிட மாரிச்சாமி மற்றும் ராம்கி மட்டும் பின்னால் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது அந்த வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாரிச்சாமி மற்றும் ராம்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“1,000 கோடி சொத்து.. அதிரடி பிரச்சாரம்…” லால்குடியில் திமுக-வை ஆட்டம் காண வைத்த லீமா ரோஸ்… அதிரும் அரசியல் களம்…!!

திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…

9 minutes ago

செங்கோட்டையன் விலகலால் அதிமுக-வுக்கு பாதிப்பா…? கோபியில் இபிஎஸ் கொடுத்த மாஸ் பதிலடி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…

19 minutes ago

“என் சாவுக்காக என் பிள்ளையே காத்திருக்கிறான்! … தைலாபுரத்தில் கண்ணீர் விட்டு கதறிய மருத்துவர் ராமதாஸ்…!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

19 minutes ago

“யாராவது சொன்னா கொன்னுடுவேன்…” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை…. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…

29 minutes ago

“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…

39 minutes ago

BREAKING: நடிகர் சித்தார்த் வேணுகோபால் காலமானார்…. கண்ணீரில் திரையுலகம்…!!

பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…

47 minutes ago