தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ரொக்க பணமும் வழங்கப்படும் நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்கம் வழங்கப்படவில்லை. இதனிடையே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரொக்க பணம் வழங்குவது குறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…