Categories: சினிமா

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போடப்பட்ட பராசக்தி ஷெட் – செலவு செய்தது எல்லாம் அந்த நடிகரோட பணமா? என்ன கொடும சார் இது?

Spread the love

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ‘வோர்ல்டு ஆப் பராசக்தி’ என்ற பெயரில் பராசக்தி படம் சார்ந்த காட்சிகள் ஷெட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்து வருகின்றனர். சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படத்துக்கு இது ஒரு நல்ல பிரமோசனாக மாறிவிட்டது.

வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே கடந்த 1960 முதல் 1965ம் காலகட்டத்தில் மெட்ராஸ் காலகட்டம் எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக இங்கு ஷெட்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கான மொத்த செலவும் நடிகர் சூர்யாவுடையது என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

முதலில் பராசக்தி படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனது நடிகர் சூர்யா தான். அவரது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்க இருந்தது. அப்போது ரூ. 10 கோடி ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளுக்காக சூர்யா செலவு செய்துள்ளார். அப்போதே இப்படி பழங்கால ஷெட் அமைக்க தி்டடமிட்டு அதற்கான பெருந்தொகையை சூர்யா ஒதுக்கி தந்துள்ளார். அதனால் இந்த ஷெட் முழுக்க நடிகர் சூர்யாவின் செலவுதான். அதே நேரத்தில் ரூ. 10 கோடிக்கு ரூ. 4 கோடி வரை சூர்யாவுக்கு திருப்பி தரப்பட்ட நிலையில், மீதி 6 கோடி ரூபாயை சூர்யா திருப்பிக் கேட்காமல் அப்படியே விட்டுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

1 minute ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

9 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

15 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

18 minutes ago

பரபரப்பு..! “எங்களை ஏன் கேவலமா பேசினீங்க..? ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை… வேதனையில் நொறுங்கிப்போன வைகோ… பரபரப்பு குற்றசாட்டு..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…

24 minutes ago

“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…

32 minutes ago