நடிகர் நாகேஷுடன் நடனமாடிய வாலியின் மனைவி…. அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!

By Soundarya on கார்த்திகை 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர். திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர்.

#image_title

தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

   
   

#image_title

 

வாலியைப் பொறுத்தவரை திரையுலகில் அனைவருமே அவருக்கு நண்பர்கள்தான். சக பாடல் ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைவருமே அவரிடம் அன்பாகப் பழகுவார்கள்.  வாலிக்கு தமிழ் சினிமாவில் ஒரு வழிகாட்டியாக இருந்தது நாகேஷ் தானாம். அந்தக்காலத்தில் இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.  சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த இவர் எம்ஜிஆரின் எண்கள் வீட்டு பிள்ளை படத்தில் உள்ள பாடல் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே.

வாலி எழுதிய ஹிட் பாடல்: நாகேஷூடன் நடனமாடிய வாலியின் மனைவி; எந்த பாடல்  தெரியுமா?

இந்த பாட்டு மூலம் இந்த பாட்டுக்கு ஒரு ரசிகை வாலிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  பின்னர் அந்த ரசிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் தான் வாலி மனைவி ரமணி. 1964 ஆம் ஆண்டு வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷுடன் அவளுக்கென்ன என்ற படத்தில் ஒரு பெண் ஆடுவார். அவர் வேறு யாருமல்ல வாலியின் மனைவி ரமணி தான்.