தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்தும் மொழிப்படங்களிலும் ஸ்டண்ட்மெனாக சினிமாவில் வாழ்க்கை தொடங்கியவர் ராஜேந்திரன். பின்னர் இவரது திறமையை தெரிந்து கொண்ட இயக்குனர் பாலா ‘நான் கடவுள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இத்திரைப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும், இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

அந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் விரட்டி இருப்பார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குனர்கள் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்தனர். ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பார்ப்பதற்கு இவர் வில்லன் போன்று இருந்தாலும், பழகுவதற்கு குழந்தை மனம் கொண்டவர். வெகுளியான மனிதர். எல்லோருக்கும் முன்பாக பேசக்கூடியவர்.

இதைத் தொடர்ந்து அவரை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்குனர்கள் வெற்றியும் கண்டனர். இவர் பத்து வருடங்களுக்கு மேல் படங்களில் நடித்து வருகிறார். சிறந்த காமெடி நடிகராகவும் வலம் வருகிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு அதிக முடிகள் இருந்ததாம். இவர் ‘ரெட் இந்தியன்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கதாநாயகன் அடி வாங்கி ஒரு குளத்தில் விழுவது போல காட்சி எடுத்தார்களாம்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் தான் தன்னுடைய தலைமுடி மொத்தத்தையும் இழந்து அழுதாராம். எந் உருவத்தை வைத்து தமிழ் சினிமாவில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அந்த உருவத்தால் பல கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளானார். ஆனால் 60 வயதை கடந்த பின்பும் இளைஞர்களுக்கே சவால் விடும் விதமாக மாறினார் மொட்டை ராஜேந்திரன். அதன் பின்னர் இவருக்கு கிடைத்ததெல்லாம் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரம் தான்.
